2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு, பரிசுத் தொகையாக 19 கோடியே 45 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 9.72 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரையிறுதியில் தோல்வியடையும் ஒவ்வொரு அணிக்கும் 4.86 கோடியும், தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் 1.08 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.