வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். கடந்த மே மாதம் வயநாட்டில் நடந்த தேர்தலில் ராகுல் காந்தி சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.