மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் அனைத்து வளங்கள் மற்றும் செல்வங்களை, அதானிக்கு தாரைவார்த்து விட்டதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பணம் கொண்டு கவிழ்ப்பதாகவும், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார். மக்களவையில் முதல் முறையாக உரை நிகழ்த்திய அவர், பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுவதாக விமர்சித்தார்.