3 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். முதலில் புருனே நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை சந்தித்து, இந்தியா-புருனே இடையேயான 40 ஆண்டு கால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அரசு முறை பயணமாக புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். பின்னர், 4-ந் தேதி புருனேவில் இருந்து சிங்கப்பூர்புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, சிங்கப்பூரின் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம்,பிரதமர் லாரன்ஸ் வாங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதோடு,சிங்கப்பூர் தொழிலதிபர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 5-ந் தேதி மீண்டும் பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.