2 நாள் லாவோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடந்தது. உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு காண முடியாது என்று தெரிவித்தார்.