சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தொடர்பான விஷயங்களில் உள்ள வேறுபாடுகளால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள அமைதி சீர்குலைய அனுமதிக்கக் கூடாது என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.