‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்.மேலும் ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் 12 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.