குஜராத் மாநிலம் வதோதராவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். அங்கு, உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்புக்கான ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.