மொரிசியஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக மொரிசியஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவருக்கு நாட்டின் உயரிய விருதினை அதிபர் தரம் கோகுல் வழங்கி கவுரவித்தார்.