2 நாள் பயணமாக கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி (( Sheikh Tamim Bin Hamad Al-Thani)) இந்தியா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இவ்வாறு பிரதமரே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பது அரிய நிகழ்வாகும். இதையடுத்து இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை கத்தார் நாட்டின் அமீர் நேரில் சந்தித்து பேசுகிறார்.