டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். கடந்த 9ஆம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.