டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். அதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.