அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை பிரதமர் மோடி மறைத்ததாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் மவுனமே பதிலாக இருக்கும் என்றும், வெளிநாட்டில் கேள்வி எழுப்பினால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும் என்றும் விமர்சித்துள்ளார்.