ஜி20 மாநாட்டிற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் உள்ளிட்டோருடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.