5ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார்.