ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர் மோடியின் விமானம் நீண்ட பாதையில் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சைப்ரஸ் மற்றும் குரோஷியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் பயணிக்கும் விமானம் பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் வான்வெளிகளைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் பயணிக்கும் என கூறப்படுகிறது.