கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். மேலும், இங்கிலாந்து அதிபர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரையும் சந்தித்தார். பின்னர் ஜி 7 அமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.