3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு, அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். பின்னர் மோடி - மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறும்.