மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். படகு விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.