ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஷ்மீரின் செனாப் நதியின் மேல் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 359 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் நடந்து சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார் இது நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.