ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைத்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை இன்றிரவு 7 மணிக்கு தனது இல்லத்தில் சந்திக்கும் பிரதமர் மோடி, உலக நாடுகளிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் கருத்துகள் குறித்து கேட்டறிவார் என கூறப்படுகிறது.