டில்லியில் நடந்த கார் வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.இந்நிலையில், பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று மதியம் டில்லி திரும்பினார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் நலத்தையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.இதையும் பாருங்கள் - டெல்லி சம்பவம், இந்தியா வந்ததும் மோடி செய்த செயல் | Delhi Car Balst News | PM Modi