இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குறிப்பிட்ட பல்சர் பைக்குகளின் விலையை பஜாஜ் நிறுவனம் குறைத்திருக்கிறது. குறைந்தபட்சமாக ஆயிரத்து 184 முதல் 7 ஆயிரத்து 379 வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பல்சர் மாடல்களின் விலையை குறைத்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. 2 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை கொண்டாடும் விதமாக, விலை குறைப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.