போர்களை நிறுத்துவதுல BUSYயா இருந்த அமெரிக்க அதிபர் DONALD TRUMP, இப்போ மீண்டும் வரிகளை கையில் எடுத்திருக்காரு. விவசாய இறக்குமதிகளுக்கு வரி விதிக்க போவதா சொல்லிருக்காரு TRUMP. இதோட பின்னணி என்ன? ஏன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுது? அமெரிக்க அதிபரான டிரம்ப், தன் இஷ்டத்துக்கு பல அறிவிப்புகள வெளியிட்டு, உலக நாடுகள் மீது ஏகப்பட்ட வரிகளை விதிச்சி வறாரு. இதனால சர்வதேச வர்த்தகம் கடுமையா பாதிக்கப்பட்டுச்சு. இதுல, அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யுற நாடுகளுக்கு மட்டுமே TRUMP வரிகளை குறைத்து வராரு.ஏற்கனவே இந்தியாவுக்கு 50% வரிகளை விதிச்சாரு. இதனால, இந்திய - அமெரிக்க வர்த்தகம் கடுமையா பாதிக்கப்பட்டுச்சு. இந்த நிலையில தான், இந்தியா மீது புதிய வரிகளை விதிக்கப் போவதா TRUMP எச்சரிக்கை விடுத்திருக்காரு. அதாவது, இந்த முறை விவசாய இறக்குமதி மீது புதிய வரிகளை விதிக்கப் போவதா சொல்லும் TRUMP குறிப்பா, இந்தியாவுல இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதா எச்சரித்திருக்காரு.அமெரிக்க விவசாயிகளுக்கான பல பில்லியன் டாலர் மதிப்புல, விவசாய உதவி திட்டத்த அறிவிச்ச TRUMP, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு வரிகளை விதிக்க போவதா தெரிவிச்சாரு. குறிப்பா, இந்தியாவுல இருந்து இறக்குமதியாகும் அரிசி, கனடாவுல இருந்து வரும் உரங்கள் மீது இந்த வரிகள் விதிக்கப்படலாம்னு சொல்லியிருந்தாரு. அமெரிக்காவுல 2 இந்திய பெருநிறுவனங்களின் கைகளில் தான், மொத்த சில்லறை அரிசி வணிகமும் இருப்பதா செய்தியாளர்கள் கேள்வியை முன்வச்சப்போ, புதிய வரிகளை விதிச்சா, இரண்டே நிமிடங்களில் எல்லா பிரச்சனைகளும் சரியாகிடும்ன்னு சொல்லிருக்காரு. அதாவது, இந்தியாவுல இருந்து அதிக அரிசி இறக்குமதி செய்வதால அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதா TRUMP குற்றம் சாட்டிருக்காரு. குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில இறக்குமதி செய்யப்படும் பொருட்களால, உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலா இருப்பதாவும், பெரும்பாலான உரங்கள் கனடாவுல இருந்து வரதாவும் சொல்லும் அதிபர் DONALD TRUMP, தேவைப்பட்டா அவற்றின் மீது கடுமையான வரிகளை விதிப்போம்ன்னு பகிரங்கமா எச்சரிக்கை விடுத்திருக்காரு.. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில, கடந்த NOV மாதமே உடன்பாடு எட்டப்படும்ன்னு சொல்லப்பட்டுச்சு. இருந்தாலும், பல காரணங்களால வர்த்தக பேச்சுவார்த்தையில இழுபறி தொடருது. இந்த சூழலில் தான் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க அதிகாரிகள் குழு இப்போ இந்தியாவுக்கு வந்திருக்கு.இதுல ஒரு சுமுக முடிவு எட்டப்படும்னு எதிர்பார்க்கப்படும் நிலையில, என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்து பாக்கலாம்.