அமெரிக்க அதிபர் பொறுப்பில் இருந்து ஜோ பைடன் விலக உள்ள நிலையில், அவருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உக்ரைனுக்கு அளித்து வரும் உதவிகள் குறைக்கப்படும் என அஞ்சிய ஜோ பைடன், தனது ஆட்சிக்காலத்திலேயே உக்ரைனுக்கு அதிகமான உதவிகளை செய்து வந்தார்.