கொடூர தாக்குதலுக்கு பின் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெருவை அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில்லுடன் பார்வையிட்டார். புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்