கிழக்கு லடாக்கில் எழும் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவிவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர்,கிழக்கு லடாக்கின் டெஸ்பாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் நிலவிய பதற்றம் தணிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.