16 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதனிடையே செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன்னோட்டமாக, இண்டிகோ விமானத்தை இயக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.