2026 சட்டமன்ற தேர்தலை யொட்டி வியூகங்களை வகுப்பதற்காக பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த கிஷோர் உடன் தவெக தலைவர் விஜய் கைகோர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்து பேசினார். அப்போது 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.