"குட் பேட் அக்லி" திரைப்படத்தில் அஜித்துடன் நடிப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்த இன்ஸ்டா பதிவில், நடிகர் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற தமது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் தாம் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு மேல் தம்மால் தகவலை பகிர முடியாது எனவும், நடிகர் அஜித் மிகவும் இயல்பான, பணிவான குணத்தை கொண்டவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.