பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. லவ் டூடே, டிராகன் என அடுத்தடுத்த படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குநர் கீர்த்திஸ்வரனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தில் பிரேமலு கதாநாயகி மமிதா பைஜூ நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.