ஹீரோ மெட்டீரியலுக்கான முகமே இல்லையேன்னு கலாய்ச்ச எத்தனையோ பேரு முன்னாடி, இன்னைக்கு GEN Z கிட்ஸால அதிகம் விரும்பப்படுற ஒரு ஹீரோவா வலம் வந்துட்டு இருக்குறவரு இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே, டிராகன், டியூட்’ என்று ஹிட் படங்கள்ல நடிச்சு, Appearance-ஓ, கலரோ முக்கியம் கிடையாது, எப்படி Perform பண்ணுறோம், எப்படி Character-அ டெலிவர் பண்ணுறோம்னு தான் முக்கியம்னு சொல்லி Prove பண்ணிருக்குற பிரதீப், தமிழ் சினிமாவுல தனக்கான இடத்தை பிடிச்சிருக்காருன்னு சொல்றதுல எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில, சினிமாவுல சான்ஸ் தேடிட்டு இருந்த காலகட்டத்துல இருந்து இப்ப வரைக்குமே தனக்கு உறுதுணையா இருந்து வரும் Best Friend, உதவி இயக்குநருமான ரமேஷ் என்பவருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பிரதீப் ரங்கநாதன் பரிசா வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்காரு. இப்போ இந்த வீடியோ தான் இணையத்துல வைரலாகிட்டு வருது. இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்யும் நெட்டிசன்ஸ், Friendshipன்னா இதான் பா Friendshipன்னு கமெண்ட்ஸ் பதிவிட்டு வர்றாங்க.