ஆந்திராவில் சமூக வலைதளங்களில் அரசுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எதிராக அநாகரீகமாவும், அவதூறாகவும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, அவரது மகனும் அமைச்சருமான லோகேஷின் மனைவி பிராமினி, துணை முதல்வர் பவன் கல்யாணின் மகள்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா ஆகியோரைக் குறிவைத்து அநாகரீகமாவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்ட மேலும் 67 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.