என் கெரியரில் இது தான் பெரிய படம்ஷங்கர் இயக்கத்தில கதாநாயகனாக ராம் சரணும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்துள்ள படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்துல நடிகை அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சு இருக்காங்க. இந்த படம் பொங்கல் பண்டியை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கு. இந்நிலையில், இந்த படத்துல தனது கதாபாத்திரம் எப்படி இருக்கும்னு சுவாரசியமான தகவல்கள நடிகை அஞ்சலி பகிர்ந்து இருக்காங்க. கேம் சேஞ்சர் படத்திலே தன்னோட கதாபாத்திரத்தின் பெயர் பார்வதின்னு சொல்லும் அஞ்சலி தன்னோட அம்மா பெயரும் பார்வதி தான்னு சொல்லிருக்காங்க. இயக்குநர் ஷங்கர் கதாபாத்திரத்தோட பெயரைச் சொன்னதும் அம்மாவை நினைச்சதா சொல்லும் அஞ்சலி இந்த கதாபாத்திரத்திற்காக தன்கிட்ட இருந்து பெரும் முயற்சி தேவைப்பட்டிருக்குன்னும், அதனை பூர்த்தி செய்ய தன்னால் முடிஞ்சதா நம்புறதாகவும், தன்னுடைய கெரியரில் இந்த படத்த தான் பெரிய படமாக பாக்குறதாகவும் தெரிவிச்சு இருக்காங்க. பெண்களுக்கு எப்போதும் 2-வது இடம் தான்கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில, இந்த விழாவுல இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நித்யாமேனன், ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கிட்டாங்க. இதனை தொடர்ந்து விழாவுல பேசிய நித்யா மேனன், சினிமாவுல பெண்கள் எப்படி பார்க்கப்படுறாங்கன்னு வேதனையோட பேசியிருக்காங்க.. ”பொதுவாக ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது அப்படி இல்லை. ஒரு படத்திலே முக்கியமான கதாபாத்திரத்திலே பெண்கள் நடிச்சாலும் நாம் 2-வதாக தான் இருப்போம். அது சினிமாவுல மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இருக்கு”ன்னு குமுறியிருக்காங்க நித்யா மேனன் மற்றொருபக்கம் படத்தின் போஸ்டரில், ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் ஜெயம் ரவிகிட்ட கேள்வி எழுப்பிய நிலையில, தான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி உள்ளதாகவும், எப்போதும் ஒரு ஆணின் பார்வையில் இருந்தே அனைத்தையும் அணுகிப் பழகிய தனக்கு பெண்ணின் பார்வை குறித்து கிருத்திகா உதயநிதி சொல்லிக் கொடுத்துள்ளதாகவும் அவர் பேசியிருக்காரு.. தமிழை விட்டு தெலுங்கில் நடிக்க செல்ல இது தான் காரணம்நடிகை ஷ்ருதி ஹாசன் ஒரு கேப்-க்கு பிறகு தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் நடிச்சுட்டு வாராங்க. உலக நாயகனின் மகள், திறமையான பாடகி மற்றும் நடிகைன்னு பன்முகத்தன்மை இருந்தும் இவங்க ஏன் தமிழில அதிகமான படங்கள்ள நடிக்கலன்னு ரசிகர்கள் தொடர்ந்து இணையத்துல கேள்வி எழுப்பிக்கிட்டு வந்துட்டு இருந்தாங்க.இந்த நிலையில, இதற்கு சமீபத்தில பதிலளிச்சு இருங்காங்க ஷ்ருதிஹாசன். இதுதொடர்பா பேசியுள்ள ஸ்ருதி, “நான் எங்க போனாலும் தமிழ் பொண்ணு தான். சென்னை தான் என் வீடு. தமிழ் சினிமாவில் எனக்கு வரும் கதைகள் பிடிக்கவில்லை. நான் நடிக்குற படம் ஆடியசுக்கு புடிக்கணும். பண்ணா சூப்பரா பண்ணனும். அப்படி கதை இருந்தால் நான் நடிக்க ரெடி நான். தமிழில் மீண்டும் நடிக்க தான் ரொம்ப நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு தகுந்த வாய்ப்பு தான் வரவில்லை”ன்னு தெரிவிச்சு இருக்காங்க. விஜய்யின் 69வது படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்கோட் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இந்த படம் விஜயின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை முடித்ததும் தீவிர அரசியலில் இறங்க இருக்கார் விஜய். தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கும் நிலையில், இதுல விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாங்க. இந்த படம் அரசியல் கதையம்சத்த மையமா கொண்டு உருவாகி வருவதாக சொல்லப்படுது.இந்நிலையில், தளபதி 69 படத்தில் டீஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு. இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், தளபதி 69 படத்திலே நடிகை மமிதா பைஜுவுக்கு ஜோடியாக அருணாச்சலம் நடிக்கவுள்ளதா கூறப்படுது.. டிராகன் படத்தின் 2nd Promo வெளியீடுஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தபடத்திலே கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் உடன் சேர்ந்து கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலே நடிச்சு இருக்காங்க. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் ஏற்கனவே தெரிவிச்சு இருக்காரு..இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் தி டிராகன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான டிரீம் சாங் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து இருக்கிறார். யாஷ் பிறந்த நாள்.. டாக்சிக் கிளிம்ப்ஸ் வெளியீடுபிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இந்த படம் வெளியாகி ரசிகர்கள்ல கவர்ந்து வசூலையும் வாரி குவிச்சு இருக்கு. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படமான, மோகன் தாஸ் இயக்கும் டாக்சிக் படத்திலே நடிச்சுட்டு வாராரு. தற்போது நடிகர் யாஷ் தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடிட்டு வாராரு. இதனை முன்னிட்டு டாக்சிக் படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் நடிகர் யாஷ் ராமாயணம் திரைப்படத்தில் ராவணனாக நடிச்சிட்டு வராது குறிப்பிடத்தக்கது. எனக்கு இருந்த பார்வையை கிருத்திகா மாற்றிவிட்டார்ஜெயம் ரவி, நித்யா மேனன், நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை.இந்த படத்தோட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி அண்மையில நடந்துமுடிஞ்ச நிலையில இதுல கலந்துகிட்ட.https://www.youtube.com/embed/wO4WXxS7Rs8