போப் ஆண்டவர் பிரான்சிசின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வாட்டிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் நீண்ட நாட்களாக ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் இப்போது, அவருக்கு நிமோனியா தொற்றும் மிகவும் சிக்கலான நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.