தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா களைகட்டியது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து, கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.மதுரை மாவட்டம், பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஒவ்வொரு துறை சார்பிலும் பொங்கல் வைத்து மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்கள் தலையில் கரகத்தை வைத்து தாரை தப்பட்டை இசைத்து நடனமாடினர். தனியார் கல்லூரியில் பொங்கல் விழாசெங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரியில் கிராமத்தைப் போன்று செட் அமைத்து, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியில் பொங்கல் விழாதூத்துக்குடியில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள், ஜாதி மத பேதமின்றி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவிகள் மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்ற பெற்றோர்தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன், பெற்றோர்களுக்கும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் நடைபெற்றது.சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்த வெளிநாட்டு பெண்கள்புதுச்சேரி, முத்துப்பிள்ளைபாளையத்தில் உள்ள ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், வெளிநாட்டு பெண்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்து வந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.தாரை தப்பட்டை முழங்க பொங்கல் விழாதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் தாரை தப்பட்டை முழங்க பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அடுப்பு மூட்டி மண்பானையில் பொங்கல் வைத்த மாணவ, மாணவிகள் கயிறு இழுத்தல், உறியடித்தல் போட்டிகளிலும் பங்கேற்றனர்.இதையும் பாருங்கள் - பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து