மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.