தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தியை மேலும் 25 சதவிகிதம் அதிகரிக்கும் வகையிலும், 2030 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50 சதவிகிதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடையும் வகையில் புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி 20 ஆண்டுகளை கடந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அதன் ஆயுள் காலத்தை நீட்டித்துக்கொள்ள 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சிக் கட்டணமாக ஒரு மெகாவாட்டிற்கு 30 லட்சம் ரூபாயை எரிசக்தி கழகத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.