ஈஷா மையத்திற்குச் சென்ற பலரைக் காணவில்லை என்றும் காவல்துறையால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஈஷா மைய வளாகத்திலேயே தகன மேடை செயல்படுவதாகவும், மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதி மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.