ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணம் பறித்து வந்த 28 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஜாய் ஜமீமா என்ற அப்பெண் பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் ஆசையாக பேசி பழகி வீட்டுக்கு வரவழைத்து போதை பொருட்கள் மூலம் மயக்கமடையச் செய்து, ஆடையின்றி புகைப்படம் எடுத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஜமீமாவை கைது செய்த நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.