உலகக் கோப்பையை முதன் முறையாக வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் இந்திய அணியினர் உறுதியுடனும், நம்பிக்கையுடன் விளையாடியதாக, எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியர்களின் மனதை வென்றுவிட்டார்கள் - ராகுல் காந்திவரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணியினர் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதை வென்று விட்டார்கள் என்றும், வீராங்கனைகளின் துணிச்சல், மன உறுதி ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.சமூக வலை தளங்களில், இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதையும் பாருங்கள் - ஆக்சன் மோடில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி - என்ன நடந்தது? | Mens Cricket Team