அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்ள இந்திய அரசு தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள அவர் வாஷிங்டனில் அதிபர் டிரம்பை சந்தித்த பிறகு அவருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.சட்டவிரோதமாக வருபவர்களுக்கு அமெரிக்காவில் தங்க உரிமையும் கிடையாது என்ற மோடி, இப்படி சட்டவிரோதமாக மக்களை குடியேற வைக்கும் நடவடிக்கைகளை கிள்ளி எறிய வேண்டும் என வலியுறுத்தினார். சாதாரணமான குடும்பங்களை சேர்ந்தவர்களை பல கும்பல்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்துவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த சட்டவிரோத கடத்தல் முறையை ஒழிக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் எனவும் மோடி தெரிவித்தார்.