இந்தியக் கடற்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 31 பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ள அதிநவீன அம்சங்கள் கொண்ட 2 அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்களை விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் 45,000 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ள 31 பிரிடேட்டர் ட்ரோன்களில் 15 இந்திய கடற்படைக்கும், 8 ட்ரோன்கள் இந்திய விமானப்படைக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.