ஊருக்குள் வரக் கூடாது என கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, காதல் திருமணம் செய்த ஜோடி உயிருக்கு பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் வாணியம்பாடி அருகேயுள்ள கணவாய்புதூரை சேர்ந்த கட்டட மேஸ்திரி சசிகுமார், தும்பேரியை சேர்ந்த வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஊர் முக்கியஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தனர்.