துபாயில் தனது கார் ரேஸ் அணியுடன் நிற்கும் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாயில் வருகிற 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற இருக்கும் துபாய் மிச்செலின் 24 ஹவர்ஸ் (Dubai Michelin 24H) பந்தயத்தில் அஜித்தின் 'AjithKumar Racing' கார் ரேஸின் அணி பங்கேற்க இருக்கிறது.அந்த அணியில் அஜித்குமாருடன் மேலும் 3 சர்வதேச வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் அஜித்குமாரும் இந்த பந்தயத்தில் டிரைவராக பங்கேற்க உள்ளார்.அதற்கான போர்ஷே 911 ஜி3 கப் 992 என்கிற ரேஸ் காரின் அஜித் பயிற்சியில் ஈடுபட்டதன் காட்சிகளும் மணிக்கு 180கிமீ வேகத்தில் காரை ஓட்டி விபத்தில் சிக்கியதன் காட்சிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்போது தனது கார் ரேஸ் அணியுடன் அஜித் நிற்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.