நீட் தேர்வை மீண்டும் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டதில் திட்டமிட்ட முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்பதால் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என கடந்த மாதம் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என காஜல் குமாரி என்பவர் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் அறையில் வைத்து மனுதாரர் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் இல்லாமல் அரை மணி நேரத்தில் மறு ஆய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.