துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே பாத்திரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் நகர மேயருமான எக்ரீம் இமாமோக்லுவை ஆளும் கட்சி ஊழல் வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஆளும் ஏகே கட்சியை எதிர்த்து எக்ரீம் இமோக்லு போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றையதினமே அவர் கைது செய்யப்பட்டதால் எதிர்க்கட்சியினர் ஆவேசமடைந்து, அதிபர் எர்டோகனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.