தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்திய இந்தியா கூட்டணியின் நோக்கத்தை, பீகார் மக்கள் முறியடித்துவிட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு.பிரதமர் மோடி, நிதிஷ் குமார் ஆகியோரின் கூட்டுத்தலைமை மக்களின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வாழ்த்து.இதுதொடர்பாக, இபிஎஸ் வெளியிட்ட பதிவு;பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னிலையில் உள்ள பாஜக கூட்டணிக்கு வாழ்த்துபீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி பீகாரில் இந்தியா கூட்டணிக்கு அம்மாநில மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் பொய் பிரச்சாரங்களையும், ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலையும் முறியடித்துள்ளனர் இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.