தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும், ஆட்சியின் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தற்போது சீர்குலைந்துள்ளதாக கூறினார். திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.