சீனாவில் கண்கவர் வாணவேடிக்கை, ஒளி மற்றும் ட்ரோன் காட்சி என, அந்நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரம் முழுவதும் உள்ள கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்ததையும், வானில் மாயாஜாலம் காட்டிய பட்டாசுகளையும், ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் ஆயிரம் ஆளில்லா விமானங்கள் மூலம் வானில் பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.